• Latest News

    August 19, 2020

    இலங்கையில் கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்க நடவடிக்கை

    பெங்கமுவே நாலக தேரரின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்க தேவையான வேலைத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுதேச மருத்துவம் தொடர்பான ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

    அரச ஆயுர்வேத மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு நேற்று விஜயம் செய்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

    பெங்கமுவே நாலக தேரர், நாட்டை மிகவும் நேசிக்கும் கடந்த காலத்தில் தேசிய சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்த பிக்கு. இதனால், இப்படியான பிக்குமார் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு அவர்களின் யோசனையை நாட்டுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

    முதலாவது நடவடிக்கையாக சுதேச மருத்துவத்திற்கு தேவையான மூலப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்காக ஆயிரம் மருத்துவ கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். அத்துடன் கிராம மக்களுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் நாட்டில் பயிராகும் அனைத்து செடிகளையும் வளர்க்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்க நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top