
குவைட்டில் இருந்து எண்ணெய் ஏற்றி வந்த எம்.ரீ.நிவ் டயமன்ட் என்ற கப்பலிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கடற்பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் பேராசிரியர் டேர்னி பிரதீப் குமார இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலில் 2 லட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் டன் மசகு எண்ணெய் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தீப்பரவலையும், எண்ணெய் கசிவையும் கட்டுப்படுத்துதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக வான் படைக்கு சொந்தமான பீ.டுவென்டி ரக கண்காணிப்பு படகு குறித்த கடற்பிராந்தியத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக கடற்பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் பேராசிரியர் டேர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.
முந்திய செய்தி : lhttps://www.themurasu.com/2020/09/03.html
0 comments:
Post a Comment