உலக புகழ்பெற்ற டிசைனர், "கிர்ஐெடா ரேடாகூஸ்"( kirjeda rodriguez ) சமீபத்தில் கேன்சர் நோயினால் இறந்து போனார்.
அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.
மரணத்தை விட உண்மையானது . இந்த
உலகத்தில் எதுவுமே இல்லை.
இந்த உலகத்தில் விலை உயர்ந்த
பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில்
நிற்கிறது .
ஆனால் ., நான் சக்கர நாற்காலியில்
அழைத்து செல்ல படுகிறேன் .
இந்த உலகத்தில் உள்ள அனைத்து
வகையான டிசைன்களிலும்
கலர்களிலும் விலை உயர்ந்த ஆடைகள்.
ஆனால் ., நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்து
கொண்டே இருந்தேன். ஆனால் ., மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்து செல்லப்படுகிறேன் .
நான் தினசரி லட்சக்கணக்கான மனிதர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு
கொண்டிருந்தேன் . ஆனால் ., இன்று மருத்துவர்களின் பரிந்துரை தான் எனது ஆட்டோகிராப் . அன்று ., தினசரி 7-சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் ., இன்று என் தலையில் முடியே இல்லை .
உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் ., இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு . தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் ., இன்று மருத்துவமனை வராந்தாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள் . எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை .
ஆனால் ., சில அன்பானவர்களின் முகங்களும், அவர்களது தொழுதல்களும், என்னை வாழ வைத்து கொண்டிருக்கிறது . உலக புகழ்பெற்ற டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள் .
அமுதன் மகேஸ்வர்மா .





0 comments:
Post a Comment