• Latest News

    September 26, 2020

    சுமனரத்ன தேரர் தொடர்பில் சட்டம் தன் கடமையினை செய்ய வேண்டும் - சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர்

    யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் சந்திக்க விரும்பியபோது அவரை நானே அழைத்துச் சென்று அவர்களை சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தேன் என அருட்தந்தை ஜோசப் மேரி தெரிவித்துள்ளார்.

    மதத்தலைவர்கள் இணைந்து நேற்றையதினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    மேலும், அம்பிட்டிய சுமணரத்ன தேரரை சென்று சந்தித்து கதைப்பதற்கு அச்சமான ஒரு நிலையே தற்போது இருக்கின்றத எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்தும், இலங்கை திருநாட்டில் பல்லின மக்களை ஒன்றிணைத்து இனங்களிடையே சமாதானத்தினை ஏற்படுத்துவதற்காக செயற்படுகின்ற அமைப்புகளில் பௌத்த மதத்தினை சேர்ந்தவர்கள் முன்னணியில் இருந்து செயற்படுவதாக மௌலவி ஷாஜஹான் தெரிவித்தார்.

    போதனையை சொல்லிக் கொடுக்கும் நாங்கள் பிரச்சினைகளுக்கும் கலவரங்களுக்கும் முன்னணியில் இருந்தால் இந்த மாவட்டத்தில் மிகவும் ஒரு சிக்கலான நிலைமையினை ஏற்படுத்துவதற்கு வழியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

    பஞ்சசீல கொள்கையினை புத்தபெருமான் போதித்தததை மக்களுக்கு போதிக்கும் பௌத்த தேரர்கள் உங்களது மனப்பாங்கினை மாற்றிக் கொண்டு சமாதானத்திற்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த சிவஸ்ரீ எஸ்.சிவபாலன் குருக்கள் தெரிவித்தார்.

    மேலும், சுமனரத்ன தேரர் தொடர்பில் சட்டம் தன் கடமையினை செய்ய வேண்டும், இல்லாதுவிட்டால் அவர் தொடர்பில் பௌத்த பீடங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.

    சிறந்த மதத்தின் தலைவர் இவ்வாறு நடந்துகொள்வது அனைத்து மததத்தலைவர்களுக்கும் இழுக்கான செயல் எனவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுமனரத்ன தேரர் தொடர்பில் சட்டம் தன் கடமையினை செய்ய வேண்டும் - சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top