• Latest News

    October 06, 2020

    கல்வியல் கல்லூரியில் பயிலும் 190 மாணவர்கள் வெளியேற தடை

    மீரிகமை, ஹாப்பிட்டிகம தேசிய கல்வியல் கல்லூரியில் பயிலும் 6 ஆசிரிய மாணவர்கள், திவுலப்பிட்டிய ஸ்ரீ ஞானவாச பாடசாலையில் கற்பித்தல் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டதன் காரணமாக, அவர்கள் உட்பட கல்வியல் கல்லூரியில் பயிலும் 190 மாணவர்கள், கல்லூரியில் இருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    கல்வியல் கல்லூரியில் சில விரிவுரையாளர்கள் இருப்பதுடன் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியல் கல்லூரியில் உள்ள அனைவரும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

    திவுலப்பிட்டிய ஸ்ரீ ஞானவாச பாடசாலையில், திவுலப்பிட்டிய கொரோனா தொற்றாளரான பெண்ணின் புதல்வி கல்வி கற்று வந்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதேவேளை கல்வியல் கல்லூரிக்கு தினமும் வந்து செல்லும் கல்வி மற்றும் கல்விசார ஊழியர்கள் கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் கையெழுத்திட்ட பின்னர் திரும்பி செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே தற்போது காணப்படும் நிலைமையில், வெயாங்கொடை சாரிபுத்த தேசிய கல்வியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் அங்கிருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் வெளியார் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளை பரவும் நோய் ஒன்று காரணமாக வெயாங்கொடை சியனே தேசிய கல்வியல் கல்லூரி சில தினங்களுக்கு முன்னர் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்வியல் கல்லூரியில் பயிலும் 190 மாணவர்கள் வெளியேற தடை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top