• Latest News

    October 06, 2020

    மூன்று லட்சம் கையூட்டல் பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரி கைது

     மூன்று லட்சம் ரூபா கையூட்டல் பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரியொருவரை இன்றைய தினம் கைது செய்துள்ளதாக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

    பண்டாரவளை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    வழக்கு விசாரணைகளில் சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதாக உறுதியளித்து நபர் ஒருவரிடமிருந்து, பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மூன்று லட்சம் ரூபா கையூட்டல் பெற்றுக்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

    நீதிமன்ற வளாகத்தின் சிற்றுண்டிச்சாலையில் வைத்து இந்த கையூட்டல் தொகையை பெற்றுக்கொண்டுள்ளார்.

    கையூட்டல் பெற்றுக்கொண்ட போது குறித்த நபரை கைது செய்ததாக கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மூன்று லட்சம் கையூட்டல் பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரி கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top