• Latest News

    November 15, 2020

    இலங்கையில் மேலும் 544 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள். கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17,127

    இலங்கையில் மேலும் 544 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

    இவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் இணைப்பாளர்கள் எனவும் மத்திய நிலையம் கூறியுள்ளது.

    இவர்களுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது.

    இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 ஆயிரத்து 495 பேர் நோய் தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்துள்ளனர்.

    மேலும் 5 ஆயிரத்து 579 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உலகம் முழுவதும் 5 கோடியே 44 லட்சத்து 47 ஆயிரத்து 355 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

    இவர்களில் 13 லட்சத்து 20 ஆயிரத்து 226 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று கோடிய 79 லட்சத்து 62 ஆயிரத்து 321 பேர் தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்துள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் மேலும் 544 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள். கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17,127 Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top