• Latest News

    November 17, 2020

    பெருமை கொண்ட அரசாங்கம் தற்போது பழியை மக்கள் மீது சுமத்துகின்றது - ஜே.வி.பி.

     (இராஜதுரை  ஹஷான்)                                                                                                      கொவிட்-19 வைரஸ்  முதலாம் சுற்று தாக்கத்தை கட்டுப்படுத்தியதாக பெருமைக் கொண்ட அரசாங்கம் வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைக்கான  பழியை மக்கள் மீது சுமத்துவது அரசாங்கத்தின் பலவீனத்தன்மையை வெளிப்படுத்துகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒன்றியத்தினர் குற்றஞ்சாட்டினர்.

    அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது,

    கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த கொழும்பு நகரில் செயற்படுத்தப்படும்  பாதுகாப்பு சுகாதார செயற்பாடாகும் பொருத்தமற்றதாக காணப்படுகிறது.

    ஒரு மீற்றர் தூர இடைவெளியில்  பொது மக்கள் இருக்க  வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. கொழும்பில் உள்ள பெரும்பாலான தோட்ட பகுதிகளில் 10 பேர்சர்ஸ் நிலப்பரப்பில்  100 ற்கும் அதிகமான குடும்பங்கள்  உள்ளன.

    இவ்வாறான நிலையில் எவ்வாறு ஒரு மீற்றர் தூர இடைவெளியை பேணுவது. பொது மக்கள் முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    சாதாரண நடுத்தர மக்கள் சுகாதார தரமற்ற முக்கவசங்களையே அணிகிறார்கள்.

    சுகாதார தரமான முக்கவசங்களை அரசாங்கம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

    கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதல் சுற்றை வெற்றிக் கொண்டதாக குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம்   கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்றின் பழியை மக்கள் மீது சுமத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் பலவீனத்தன்மையினை வெளிப்படுத்துகிறது.
    virakesari -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பெருமை கொண்ட அரசாங்கம் தற்போது பழியை மக்கள் மீது சுமத்துகின்றது - ஜே.வி.பி. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top