• Latest News

    November 15, 2020

    இலங்கையில் எயிட்ஸ் நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம்

    இலங்கையில் எயிட்ஸ் நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதிகளவான ஆண்கள் சமூக ஊடகங்களில் தங்களை விளம்பரம் செய்து வரும் நிலையில் எச்.ஐ.வீ நோய்த் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை உயர்வடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் செயற்திட்டத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பெரும்பாலானவர்கள் வீடுகளில் தங்கியிருப்பதாக இந்த செயற்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

    இளம் ஆண்கள் சமூக ஊடகங்களின் ஊடாக தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக அண்மைய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    இலங்கையில் சுமார் 3600 எச்.ஐ.வீ தொற்றாளிகள் உள்ளதாகவும் இதில் 2000 பேர் மட்டுமே மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் எயிட்ஸ் நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top