நிந்தவூரில் இன்று காலை கபன் சீலை விழிப்புணர்வு நடைபவணி ஒன்று நடைபெற்றது. கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தே இந்த நடைபவணி இடம் பெற்றது.
ஆயினும், இந்த நடைபவணியை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். நிந்தவூர் பெரிய பள்ளிவாசலை கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டமையால், பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள நாற்சந்தியோடு விழிப்புணர்வு நடைபவணி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதே வேளை, இந்த நடை பவணியின் போது பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.









0 comments:
Post a Comment