ஒருசில மருந்துகள், உணவுகள் மற்றும் தடுப்பூசிகளால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் நபர்கள் ஃபைசர் / பயோஎன்டெக் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என பிரிட்டனின் மருந்து சீராக்கிகள் கூறியுள்ளனர்.

செவ்வாயன்று ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட இரு சுகாதார அதிகாரிகளுக்கு ஏற்பட்ட ஒவ்வாமையின் விளைவாகவே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தடுப்பூசிகளை பெற்ற சிறிது நேரத்திலேயே இருவருக்கும் ஒரு எதிர்வினை ஏற்பட்டுள்ளது. எனினும் சிகிச்சைகளின் பின்னர் இருவர் தற்போது நான்றாக உள்ளனர்.

தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இது போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்புதான் என்றும், அதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்ட 2 சுகாதார பணியாளர்களுக்கும், ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சினை இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவர்கள் மற்றும் முன்னணித் தொழிலாளர்களிடமிருந்து தொடங்கி, பிரிட்டன் செவ்வாயன்று அதன் மக்களுக்கு வெகுஜன தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளது. இது உலகளாவிய கொரோனாவுக்கு எதிரான உந்துதலின் ஒரு பகுதியாகும்.