முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, பொதுஜன பெரமுவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக, சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் குற்றஞ்சாட்டுகின்றார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை குறிப்பிட்டார்அமெரிக்காவில் ஒரு காலையும், இலங்கையில் ஒரு காலையும் வைத்துக் கொண்டுள்ள
பெசில் ராஜபக்ஸவுக்கு நாம் ஒரு விடயத்தை தெரிவிக்கின்றோம்.நீங்கள்
கட்சிக்காக சில விடயங்களை செய்துள்ளீர்கள். அதனை நாம் ஏற்றுக்
கொள்கின்றோம்.ஆனால் தமது பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை அடிப்படையாக
கொண்டு, பலமான சக்திகளை தாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டாம்.ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் கலந்துரையாடி அவற்றைத்
தீர்த்துக் கொள்ளுங்கள், அதைவிடுத்து இல்லாத பிரச்சினைகளையும்,
நெருக்கடிகைளையும் ஏற்படுத்தி, அரசாங்கத்திற்குள் பிளவொன்று ஏற்பட்டுள்ளதாக
கூறி, விமர்சனங்களைப் பரப்ப வேண்டாம். யாரை திருப்திப்படுத்துவதற்கு
அல்லது மகிழச்சிப்படுத்துவதற்கு இதனை செய்கின்றீர்கள் என கேட்கின்றோம்.

0 comments:
Post a Comment