• Latest News

    February 12, 2021

    பொத்துவில் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது..!

    அ.இ.ம.கா இனுடைய தேசியத்தலைமை கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பா.உ. கௌரவ SMM முஷாரப் அவர்களின் அயராத முயற்சியாலும் ஏனைய கௌரவ சபை உறுப்பினர்களின் கட்சி பாகுபாடற்ற வலிமையான ஒத்துழைப்புக்களாலும் இன்று பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது.

    இன்றைய தெரிவின் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு வாக்களித்த அ.இ.ம.கா. இன் கௌரவ உறுப்பினர்களான முன்னாள் பிரதி தவிசாளர் AMM. தாஜூதீன், NH. முனாஸ், AP. சதக்கத்துல்லாஹ், ஆஷியா பீவி, ஐ.தே.க. இன்  கௌரவ உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான MSM. மர்சூக், த.தே.கூ இன் கௌரவ உறுப்பினரும் பிரதி தவிசாளருமான P. பார்த்தீபன், ஶ்ரீ.ல.சு.க. இன் கௌரவ உறுப்பினர் M. அன்வர் சதாத், MH. ஜமாஹிம், ஜூனைதா உம்மா, அ.இ.த.கா. இன் கௌரவ உறுப்பினர் N. சசிதரன், சுயேற்சை குழு கௌரவ உறுப்பினர் S. பக்குறுதீன், ம.வி.மு. இன் கௌரவ உறுப்பினர் ஆதம் சலீம் ஆகிய 13 உறுப்பினர்களுக்கும் பொத்துவில் மக்களும் அ.இ.ம.கா கட்சியினரும் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

    தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளர் ஆளுமை மிக்க நிர்வாகத்திறனோடு நிலையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.





     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொத்துவில் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது..! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top