• Latest News

    February 13, 2021

    பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையே இரு தரப்பு உடன்படிக்கை

    பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வரும்போது இருதரப்பு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

    இம்ரான் கான் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

    இந்த சந்தர்ப்பத்தில் தற்போதுள்ள உடன்படிக்கைகளும் புதுப்பிக்கப்படவுள்ளன.

    ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த பயணம் இடம்பெறுவது முக்கியத்துவம் பெறுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

    ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடாக இருந்து வருகிறது.

    அதேநேரம் ஓஐசி என்ற இஸ்லாமிய நாடுகளின் அமைப்பிலும் முக்கிய நாடாகப் பாகிஸ்தான் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையே இரு தரப்பு உடன்படிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top