• Latest News

    February 08, 2021

    ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி - கல்வி அமைச்சு

    தற்போது நாடளாவிய ரீதியில் மருத்துவர்கள் மற்றும் படையினருக்கு செலுத்தப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசியை ஆசிரியர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

    அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    “குறித்த தடுப்பூசியை ஆசிரியர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் பரிந்துரைத்துள்ளேன்.

    காரணம் என்னவென்றால் ஆசிரியர்கள் அவதான நிலையில் உள்ளனர். பலருடன் நாளாந்தம் பழகுகின்றனர்.

    இதன் காரணமாக ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பை வழங்குவது நமது கடமையாகும். எனது கருத்தை நான் முன்வைத்துள்ளேன்.

    லலித் வீரதுங்கவிடம் இது தொடர்பில் பேசியுள்ளேன். ஆசிரியர்களுக்கும் இதனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

    பெப்ரவரி மாதத்தின் இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் எனக்கு கூறியுள்ளார்” என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி - கல்வி அமைச்சு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top