• Latest News

    May 06, 2021

    மாலைதீவில் குண்டு வெடிப்பு - முன்னாள் ஜனாதிபதி காயம்!

    மாலைதீவில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீத் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இன்று இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டிற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அந்நாட்டு இளைஞர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அஹமட் மஹ்லூப் தெரிவித்துள்ளார்.

    சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

    சபாநாயகர் அவரது வீட்டில் இருந்து அவரது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது.

    இதன்போது, அவருடன் சென்ற மெய்க் காப்பாளர்களுள் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாலைதீவில் குண்டு வெடிப்பு - முன்னாள் ஜனாதிபதி காயம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top