• Latest News

    April 05, 2022

    அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இலங்கை கிரிக்கட் அணி தலைவர்

    நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

    நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பொது மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவும் அரசாங்கத்திற்கு எதிரான கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இலங்கை கிரிக்கட் அணி தலைவர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top