• Latest News

    August 17, 2022

    இன்று நாள்ளிரவு முதல் எரிவாயு சிலிண்டரின் விலையை 1050 ரூபாவால் குறைக்கின்றது

     லாப் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 1,050 ரூபாவால் குறைக்க லாப் கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் இன்று நாள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருமென லாப் எரிவாயு நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.

    அதன்படி லாப் எரிவாயு ஒன்றின் புதிய விலை  5,850  ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 5 கிலோ எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 2,320 ரூபாவாகும்.

    இதேவேளை, 2 கிலோகிராம் லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 928 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) லாப் எரிவாயு கப்பல்  எரிவாயுவுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் எரிவாயு நிரப்புதல் செயற்பாடு தொடங்கப்பட்டவுடன் விநியோகச் செயற்பாடுகள் தொடங்கும் எனவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்று நாள்ளிரவு முதல் எரிவாயு சிலிண்டரின் விலையை 1050 ரூபாவால் குறைக்கின்றது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top