• Latest News

    March 29, 2023

    எரிபொருட்களின் விலைகள் சற்று முன்னர் குறைக்கப்பட்டுள்ளது

    இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் சற்றுமுன் குறைக்கப்பட்டுள்ளன. 

    இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    குறித்த விடயத்தை விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். 

    92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

    அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எரிபொருட்களின் விலைகள் சற்று முன்னர் குறைக்கப்பட்டுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top