• Latest News

    April 10, 2023

    இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பிரஜை மரணம்

     ரஷ்ய பிரஜை ஒருவர் (37 வயது) எல்ல பிரதேசத்தில் உள்ள ‘புஞ்சி சிறிபாத’ சுற்றுலா தலத்திற்கு சென்று திரும்பிய போது சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.


    குறித்த நபர் தனது மனைவி, குழந்தை, மற்றுமொரு ரஷ்ய தம்பதியுடன் அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர், சுகயீனமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    குறித்த ரஷ்ய பிரஜையின் சடலம் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எல்ல சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பிரஜை மரணம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top