(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
நாவிதன்வெளி
பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 150 மணித்தியால
சிங்கள மொழி கற்கை நெறியை தொடரும் பயிலுனர்கள் ஏற்பாடு செய்த நல்லிணக்க
விசோட இப்தார் நிகழ்வு நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் பாடநெறியின்
பிரதான வளவாளர் ஏ.எச். நாஸிக் அஹமத் தலைமையில் (04) நடைபெற்றது,
நாவிதன்வெளி
பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், நிருவாக உத்தியோகத்தர் கே.
யோகேஸ்வரன், நிதி உதவியாளர் ஏ.எஸ்.எம் முஜாஹித் மற்றும் கலாசார
அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள்
என பலர் கலந்து கொண்டனர்.
நோன்பின் மகிமை பற்றிய இப்தார் விசேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் ஏ.எம். தெளபீக் (நழீமி) நிகழ்த்தினார்.
நிகழ்வின் போது உரையாற்றிய பிரதேச செயலாளர், ஒரு ஓவியத்திற்கு ஒரு குறித்த நிறத்தை மட்டும் தீட்டும் போது அந்த நிறத்தை மட்டும் ரசிப்பவர்கள் இருப்பார்கள். அதே ஓவியத்திற்கு பல நிறங்களை தீட்டுகின்ற போது பலரும் ரசிக்கக் கூடியதாக அந்த ஓவியம் மாறிவிடுகிறது. பல்லின சமூக மக்களும் வாழுகின்ற எமது நாட்டில், ஒவ்வொரு சமூகத்தவர்களதும் சமய , கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு மதிப்பளிப்பது இன நல்லுறவுக்கு வித்திட்டுச் செல்லும்.
இந்த சிங்கள மொழி கற்கை நெறியை தொடர்கின்ற மாணவர்களுக்கு இது ஒரு வசந்த காலமாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுடைய விசேட, பண்டிகைத் திருவிழாக்கள் கொண்டாடப்படும் காலப்பகுதியாக இந்தக் காலப்பகுதி காணப்படுவதால், பல்லின சமூகத்தவர்களும் ஒன்று சேர்ந்து இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து சிறப்பிப்பது வரவேற்கத்தக்கதாகும் என்று தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில் பாடநெறியை தொடரும் மாணவர்களின் சார்பில் ஏ.எச்.எம்.நிப்றாஸ் நன்றி உரையை நிகழ்த்தினார்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment