• Latest News

    April 10, 2023

    ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் கட்சி மாறுவார்கள் - நளின் பண்டார M.P


    ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் புத்தாண்டை அடுத்து கட்சி மாறுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

    ”கட்சி மாறுவதை நாங்கள் மறுக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி மாறுவர்”, என புத்தாண்டின் பின் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அரசாங்கத்திற்கு கட்சி மாறுவது தொடர்பில் வினவிய போது அவர் தெரிவித்தார்.

    ஜனாதிபதி  ரணில் பற்றி புகழ்ந்து பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தொடர்பில் குறிப்பிடுகையில் அவருக்கு எப்போதுமே கட்சி தாவி சென்று அமைச்சுப்ப பதவியை ஏற்கும் எண்ணம் இருந்தது.

    ராஜிதவுக்கு எப்போதுமே ஜனாதிபதியை ஆதரிக்கும் ஓர் எண்ணம் இருந்தது. அத்தோடு கடந்த காலங்களில் பல தடவை அவர் இதுபோன்ற செயல்களை செய்திருப்பதால் , கட்சி தாவுவது ராஜிதவுக்கு ஒரு பெரிய விடயமில்லை என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் கட்சி மாறுவார்கள் - நளின் பண்டார M.P Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top