• Latest News

    July 26, 2024

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தல்!


    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

    எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனாதிபதி சார்பில் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் இந்த விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்வு ஒன்றில் சற்று முன்னர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தல்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top