• Latest News

    January 07, 2026

    நுவரெலியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்!

     


    நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான, நீர் விமானம் (சீ பிளேன்) இன்று (07) விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. 

    விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 2  விமானிகள் காயமடைந்து நுவரெலியா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம்  விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் இருந்த 2  விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.

    சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  




     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நுவரெலியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top