• Latest News

    January 14, 2026

    பால்மாவின் விலையை குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம்


    இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு  அமைச்சு தெரிவித்துள்ளது.

    அதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.அத்துடன் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையை 50 ரூபாவினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலையை 50 ரூபாவினால் குறைக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலக சந்தையில் பால் மா விலை குறைந்து வருவதால், அதன் பலனை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் இந்த புதிய விலை நடைமுறையாகும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பால் மா விலையை குறைக்க எதிர்பார்க்கிறோம் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பால்மாவின் விலையை குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top