ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு மேற்கொள்ளும்
தனது விஜயத்தின் போது உண்மை நிலைமையை நேரில் கண்டறிவார் எனவும், அதன்
பின்னர் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப் பட்டுள்ள பல்வேறு பொய்க்
குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நம்புவதாக பாதுகாப்புப்
படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளைக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment