• Latest News

    August 23, 2013

    அதிபர், ஆசிரியர் கௌரவிப்பு தொடர்பான சுற்றுநிருபங்கள் அக்கரைப்பற்று வலயத்திற்கு கிடைக்கவில்லை.

    அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிந்தனை அடிப்படையில் வருடாவருடம் சிறந்த அதிபர்கள்,ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டு அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம் இதற்குரிய சுற்றுநிருபங்களின் நியதிக்கு ஏற்ப வலயக்கல்விப்பணிப்பாளர்,மாகாணக் கல்விப் பணிப்பாளர் போன்றோரின் தெரிவின் அடிப்படையில் பெயர்ப்பட்டியல் கல்வியமைச்சுக்கு அனுப்பப்படும். இதன்பிரகாரமே கௌரவிப்பு நடைபெறும்.
    கடந்தகாலங்களில் கௌரவிக்கப்பட்டவர்கள் குறைவாக விடுமுறைபெற்றவர்களாகவே இருந்துள்ளனர்.ஏனைய நியதிகளைவிட விடுமுறை தொடர்பான நியதியின் செல்வாக்கு அதிகமாகவுள்ளது.இது தொடர்பான சுற்றுநிருபங்கள் அக்கரைப்பற்று வலயத்தில் உள்ள பல பாடசாலைகளுக்குக் கிடைக்கவில்லை.இது தொடர்பான எவ்விதத்தகவலும் ஆசிரியர்கட்கு கிடைக்கவில்லை.
    மாகாணக் கல்விப்பணிப்பாளரின் தகவலின் அடிப்படையில், இம்முறை விண்ணப்பங்கள் குறைவாகக்கிடைத்திருப்பதாகவும்,அதிலும் அதிகம் உடற்கல்வி ஆசிரியர்களுடையதாகவும் இருப்பதாகவும் அறியமுடிகிறது.ஆகவே. இந்த நிலையேற்பட யார்காரணம் என ஆராயப்படவேண்டும்.ஆசிரியர்கள் இதில் அக்கறை இன்றி இருக்கவில்லை.ஆர்வமாகவே உள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அதிபர், ஆசிரியர் கௌரவிப்பு தொடர்பான சுற்றுநிருபங்கள் அக்கரைப்பற்று வலயத்திற்கு கிடைக்கவில்லை. Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top