• Latest News

    August 22, 2013

    வடக்கின் யுத்த வெற்றிக்கு உரிமைகோருவோர் வெலிவேரிய சம்பவத்திற்கு உரிமை கோரவில்லை - விஜித

    வடக்கில் பெற்­றுக்­கொண்ட யுத்த வெற்­றிக்கு பலரும் உரிமை கொண்­டா­டினர். எனினும்இ வெலி­வே­ரிய ரத்­து­பஸ்­வல சம்­ப­வத்­தின்­போது துப்­பாக்கிப் பிர­யோ­கத்­துக்­கான உத்­த­ரவு பிறப்­பித்­த­மைக்­கான உரிமை இது­வ­ரையில் எவ­ராலும் கோரப்­ப­ட­வில்லை என்று ஜன­நா­யக தேசியக் கூட்­டணி எம்.பி.யான விஜித ஹேரத் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

    வெலி­வே­ரிய சம்­ப­வ­மா­னது வடக்கில் என்ன இடம்­பெற்­றி­ருக்கும் என்­பதை இலங்கை வர­வி­ருக்கும் மனித உரி­மை­க­ளுக்­கான விவ­கா­ரங்­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உயர்ஸ்­தா­னிகர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு பிர­தி­ப­லித்துக் காட்­டி­விட்­ட­தா­கவும் அவர்­கூ­றினார்.

    பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியின் ஜோன் அம­ர­துங்க எம்.பி.யினால் கொண்­டு­வ­ரப்­பட்ட வெலி­வே­ரிய சம்­பவம் தொடர்­பி­லான சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.



    விஜித ஹேரத் எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்

    இலங்­கையில் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­வ­தாக குற்­றச்­சா­ட­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தற்கு அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களே பிர­தான கார­ண­மாகும்.

    வெலி­வே­ரிய ரத்­து­பஸ்­வல மக்கள் தமக்கு சுத்­த­மான குடி­நீ­ரையே பெற்றுத் தரு­மாறு கேட்­டனர். ஆனால்இ நீரைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு பதி­லாக அந்த மக்­க­ளுக்கு துப்­பாக்கிச் சூடுதான் பெற்றுக் கொடுக்­கப்­பட்­டது.

    வெலி­வே­ரி­யவில் இடம்­பெற்ற சம்­ப­வ­மா­னது வடக்கில் என்ன இடம்­பெற்­றி­ருக்கும் என்­பதை பிர­தி­ப­லிப்­பதாய் அமைந்­தி­ருக்­கின்­றது.அது மாத்­தி­ர­மின்றி வெலி­வே­ரிய சம்­ப­வத்­தி­னூ­டாக ஒட்­டு­மொத்த விட­யங்­க­ளையும் குறித்த அறிக்­கையை நவ­நீ­தம்­பிள்ளை தயா­ரிக்­கக்­கூ­டி­யதாய் அமைந்­து­விட்­டது.

    வடக்கில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட யுத்த வெற்­றிக்கு பலரும் உரிமை கொண்­டா­டினர்.ஆனால்இ ரத்­து­பஸ்­வ­லயில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வத்தில் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­வ­தற்கு உத்­த­ர­விட்­டவர் யார் என்ற உரிமை இன்­று­வ­ரையில் எவ­ராலும் கோரப்பட­வில்லை.

    மக்­களைக் காப்­ப­தாக தலைமை கூறு­கின்­றது.அப்­ப­டி­யெனில் ரத்­து­பஸ்­வல பிர­தே­சத்தில் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­ட­போதே அந்த தலைமை எங்கே சென்­றி­ருந்­தது எனக் கேட்­கிறேன்.

    இது ஒரு­பு­ற­மி­ருக்கஇ- கிராண்ட்பாஸ் சம்­ப­வமும் இது போன்றே இடம்­பெற்­றுள்­ளது.அஙகும் அசா­தா­ரண நிலை­மைகள் தோற்­று­விக்­கப்­பட்­டி­ருந்­ததைக் காண முடிந்­தது.

    இத்­த­கைய சம்­ப­வங்­க­ளையும் அதன் பின்­ன­ணி­யையும் எதிர்க்­கட்­சிகள் சென்று எங்கும் கூறத் தேவையில்லை.ஆளும் கட்சியில் உள்ளவர்களே அதாவது அரசாங்கமே இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது.அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசாங் கமே காரணமாகியிருக்கின்றது.

    இந்நிலையில் தண்ணீர் கேட்டு போராடிய ரத்துபஸ்வல மக்களின் கோரிக்கையை நியாயபூர்வமாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கின் யுத்த வெற்றிக்கு உரிமைகோருவோர் வெலிவேரிய சம்பவத்திற்கு உரிமை கோரவில்லை - விஜித Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top