• Latest News

    August 21, 2013

    இலங்கை பேசுவதனை குறைத்து செயலில் ஈடுபட வேண்டும் – ஐ.நா

    இலங்கை பேசுவதனை குறைத்து செயலில் ஈடுபட வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 480000 மக்களை மனிதாபிமான அமைப்புக்களும் அரசாங்கமும் இணைந்து மீள் குடியேற்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நேண்டி தெரிவித்துள்ளார்.
    உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகளவில் பேசுவதனை நிறுத்தி செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    மக்களின் மனிதாபிமான தேவைகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை பேசுவதனை குறைத்து செயலில் ஈடுபட வேண்டும் – ஐ.நா Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top