கெய்ரோ,
எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முகமது முர்சி பதவி நீக்கத்தை
கண்டித்து சகோதரத்துவ கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி
ஏற்பட்ட மோதல், வன்முறைகளில் கடந்த வாரம் 800 பேர் பலியானார்கள்.
இந்நிலையில் இஸ்ரேல் எல்லையை ஒட்டி இருக்கும் சினாய் பகுதியில் உள்ள
ராபாஹ் நகரில் தீவிரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட
பொலிஸார் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். துப்பாக்கியாலும்
சரமாரியாக சுட்டனர். அதில் 24 பொலிஸ்காரர்கள் இறந்தனர். மேலும் 3 பேர்
காயம் அடைந்தனர். இச்சம்பவத்தையும் சேர்த்து ஒரு வாரத்தில் பலியான
போலீசாரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது. கலவரம் சாவு 850 ஆக அதிகரித்தது.
இச்சம்பவத்திற்கு முன்னதாக கெய்ரோ மசூதியில் கைது செய்யப்பட்ட
சகோதரத்துவ கட்சியினர் 600 பேர் பொலிஸ் அதிகாரியை பிணைக்கைதியாக பிடித்து
வைத்து ஜெயிலில் இருந்து வாகனங்களில் தப்பினார்கள். அப்போது பாதுகாப்பு
படையினருக்கும், சகோதரத்துவ கட்சியினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை
நடந்தது. அதில் 38 கைதிகள் உயிர் இழந்தனர்.
0 comments:
Post a Comment