• Latest News

    November 13, 2013

    கென்னடியின் உயிரைக் குடித்த விசித்திரமான மர்ம 'தோட்டா': வெளிவராத புதிய தகவல்கள்

    நியூயார்க்: குண்டடிபட்ட கென்னடிக்கு சிகிச்சை அளித்த நர்சுகளில் ஒருவர், கென்னடியின் மரணம் குறித்தான புதிய தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதில் கென்னடியின் கழுத்தில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று மிகவும் விசித்திரமாக இருந்ததாக  புதிய தகவலை தெரிவித்துள்ளார்

    அவர். அமெரிக்காவின் 38-வது அதிபராக பதவி வகித்தவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜான் எப் கென்னடி.
    இவர் கடந்த 1961 முதல் 1963-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ந்தேதி தனது 46-வது வயதில் டெக்காஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்டடார். கென்னடி இறந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள்  ஆகும்  நிலையில் அவரது  மரணம்  குறித்து புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

    குண்டடி பட்ட கென்னடிக்கு முதலுதவி அளித்த பைலிங் ஹால் (78) என்ற நர்ஸ் தற்போது சில பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் லண்டன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில கூறியிருப்பதாவது...

    முதலுதவி.... தலையில்  துப்பாக்கி  தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜான் எப்.கென்னடியின் தலையை தூக்கி பிடித்தபடி அவரது சுவாசம் சீரடைவதற்கான முதலுதவியை நான் செய்தேன்.
     விசித்திரக்காட்சி... .
    அப்போது ஒரு விசித்திரமான காட்சியை நான் பார்த்தேன். துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த பலருக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். ஆனால், அன்று கண்டது போன்றதொரு காட்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை.

    அரை அங்குல தோட்டா... அவரது காதுக்கும், தோள்பட்டைக்கும் இடையே கூர்மையான ஒரு விசித்திர தோட்டாவை நான் பார்த்தேன். அந்த தோட்டா சுமார் அரை அங்குல நீளம் இருந்தது.
     கூர்மையானது...
    சாதரணமாக துப்பாக்கியில் இருந்து வெடித்து சீறிப்பாயும் தோட்டாக்களின் முனை மழுங்கிப்போய் இருக்கும். ஆனால், அந்த தோட்டாவின் முனை மட்டும் கூர்மை மழுங்காமல் இருந்தது. எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

     
    சிராய்ப்பும் இல்லை....
    மேலும், துப்பாக்கியின் குழலில் இருந்து வெளியேறும் வேகத்தில் தோட்டாவின் வெளிப்பகுதிகளில் சிராய்ப்பு (தேய்வது) அறிகுறி தென்படும். அதுவும் அந்த தோட்டாவில் தென்படவில்லை.
     குழப்பம்....
    எந்தவகை துப்பாக்கியில் இருந்து அந்த தோட்டா வெளியே வந்தது என்ற அறிகுறிகளை அந்த தோட்டாவை பரிசோதித்து கண்டுபிடிக்க இயலாத நிலையில் அது இருந்தது.
    வித்தியாசமானது....
    ஜான் எப்.கென்னடி படுகொலை தொடர்பான விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட தோட்டாக்களில் இருந்து அது மிகவும் வித்தியாசமாக தோற்றமளித்தது.
     மர்ம தோட்டா எங்கே..?
    அந்த தோட்டாவும் அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டது. ஆனால், கடைசி வரை அந்த 'மர்ம தோட்டா' கோர்ட் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படவே இல்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கென்னடியின் உயிரைக் குடித்த விசித்திரமான மர்ம 'தோட்டா': வெளிவராத புதிய தகவல்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top