கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு பூராவும் அமைக்கப்பட்டுள்ள 4300 பரீட்சை நிலையங்களில் இன்று ஆரம்பமாகிறது.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை 8 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை பரீட்சையில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார்.
இவர்களில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 56 பாடசாலை மட்ட பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 84 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை 8 மணிக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு செல்லுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை பரீட்சையில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார்.
இதேவேளை, 510 மாற்றுத் திறனாளிகளுக்கென 5 இடங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 3 கைதிகளுக்கான மகஸின் சிறையில் விசேட பரீட்சை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நிலையங்களுக்கருகில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள தோடு பொலிஸார் ரோந்து கடமைகளில் வைக்கப்பட உள்ளனர். பரீட்சையை முன்னிட்டு 534 இணைப்பு நிலையங்களும் 33 பிரதேச சேகரிப்பு நிலையங்களும் 2 மத்திய சேகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
20 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெற உள்ளதோடு பாடசாலைகளில் கூட்டங்கள் வகுப்புகள் நடத்துவது 20 ஆம் திகதி வரை தடைசெய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment