சமூகசேவை அமைச்சின் அணுசரனையுடன் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித்
தலைவர் வை.எல். சுலைமாலெவ்வையின் ஏற்பாட்டில், பிரதேச செயலகத்துடன்
இணைந்து பொது மக்களுக்கான இலவச கண் பரிசோதனையும், உடன் கண்ணாடி வழங்கும்
நிகழ்வும் 25.05.2014 நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி பாடசாலையில் இடம்
பெற்றது. இந்நிகழ்விற்கு நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஹாஜியானி
ஆர்.யு. அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மூக்குக் கண்ணாடிகளை
வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அதிகமானோர்கள் பயன்பெற வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.May 26, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment