• Latest News

    May 26, 2014

    தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 09 வது பட்டமளிப்பு விழா

    எம்.வை.அமீர்;
    இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழா  24-05-2014 சனிக்கிழமை 2.00 மணிக்கு பல்கலைக்கழக, ஒலுவில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் இடம்பெற்றது.

    சரியாக 1.15 மணிக்கு பட்டதாரிகள் அணிவகுப்பு ஆரம்பிப்பதுடன் விழாவுக்கான ஏனைய நடைமுறைகளும் இடம்பெற்றதன் பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் அச்சி முகம்மட் இஷாக் அவர்கள் 2.30 மணிக்கு நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வின் முக்கிய பேச்சாளரான கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தர அவர்கள் பற்றிய அறிமுகம் ஒன்றினை உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் வழங்கினார்.

    பின்னர் நிகழ்வின் முக்கிய பேச்சாளரான திறைசேரியின் ஆளுநரும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தர அவர்கள் விசேட உரையாறினார்.

    முதல் நிகழ்வாக சட்டத்துறையில் சாதனைபடைத்த ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வீ.வீரமந்திரி மற்றும் பாயீஸ் முஸ்தபா ஆகியோருக்கு விசேட கலாநிதி பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

    இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்ற 441 மாணவர்கள் அவரவர் கற்ற பிரிவுகளில் இருந்து பட்டங்களை பெற்றனர். இதில் 2011/2012 கல்வி ஆண்டில் வர்த்தக முகாமைத்துவ பீடத்ததில் வணிக நிர்வாக முதுகலை பட்டத்தை 09 மாணவர்களும், பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து 2007/2008 கல்வி ஆண்டில் விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் (விசேடம்) 03 மாணவர்களும், பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து விஞ்ஞானத்தில் 2008/2009 கல்வி ஆண்டில் இளங்கலை பட்டத்தை 31 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்தில் இருந்து 2007/2008 கல்வி ஆண்டில் விசேட பட்டத்தை 45 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்தில் இருந்து 2008/2009 கல்வி ஆண்டில் 89 பேரும் அரபு இஸ்லாமிய பீடத்தில் இருந்து விசேட பட்டத்தை 2007/2008 கல்வி ஆண்டில் 24 பேரும் 2008/2009 கல்வி ஆண்டில் பட்டத்தை 83 பேரும் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இருந்து 2007/2008 கல்வி ஆண்டில் வர்த்தக முகாமைத்துவ பட்டத்தை 65 பேரும் 2008/2009 கல்வி ஆண்டில் வர்த்தக பட்டத்தை 41 பேரும் 2008/2009 கல்வி ஆண்டில் விஞ்ஞான தொழில்நுட்ப பட்டத்தை 01 வரும் 2008/2009 கல்வி ஆண்டில் விஞ்ஞான தொழில்நுட்ப பட்டத்தை 52 பேரும் பெற்றனர்.
    பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து சிறந்த மாணவியாக மர்ஹும் கலாநிதி எம்.எச்.எம்.அஸ்ரப் ஞாபகார்த்த பதக்கத்தை எம்.என்.பஸ்லுல் ஹஸ்னாவும் கலைகலாச்சார பீடத்தில் இருந்து பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த பதக்கத்தை எம்.ஆர்.றாசியாவும் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இருந்து அல் ஹாஜ் ஏ.எல்.இப்ராலெப்பை  ஞாபகார்த்த பதக்கத்தை ஏ.ஆர்.பாத்திமா தபாணியும் அல் ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில் ஞாபகார்த்த பதக்கத்தை ஜீ.எம்.எம். .பாத்திமா ரக்சானாவும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வீ.வீரமந்திரி அவர்களால் ஒருதொகுதி நூல்கள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தர அவர்களுக்கு பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது 

    அரசியல்வாதிகள் வாதிகள் தரப்பில் இருந்து பிரதி அமைச்சர் பைசர்முஸ்தபா அவர்களும் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.









    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 09 வது பட்டமளிப்பு விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top