• Latest News

    November 19, 2014

    இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட5 இந்தியர்கள் விடுதலை !

    இலங்கைக் கடற்பரப்பிற்குள் போதைப்பொருள் கடத்திய குற்றசாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இந்தியா தமிழ் நாட்டை சேர்ந்த ஐந்து பேரும் விடுடிக்கப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள்
    தகவல் வெளியிட்டுள்ளன.

    விடுவிக்கப்பட்டுள்ள ஐந்து போரையும்  இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய உயர்மட்ட அதிகாரி ஒருவர்  கூறியுள்ளார்

    இலங்கைக் கடற்பரப்பிற்குள் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து இந்திய மீனவர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களுடன் , 3 இலங்கை மீனவர்களும் 2011 ஆம் ஆண்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஐந்து இந்தியர்களுக்கும்  , இலங்கையர்கள் மூவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    இதனையடுத்து இந்திய ‘மீனவர்கள்’ ஐவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

    மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் சார்பாக இலங்கையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு நேற்று வாபஸ் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட5 இந்தியர்கள் விடுதலை ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top