• Latest News

    November 22, 2014

    மட்டக்களப்பில் கனத்த மழை நீரினால் மூடப்பட்ட போக்குவரத்து வீதிகள்

    மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக பல வீதிகள் நீரினால் மூடப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

    அந்த வகையில் மட்டக்களப்பு புதூர் விமானப் படை தளத்திற்கு முன்பாக உள்ள ஆறு பெருகியமையால் ஆற்றுக்கு இடையாக செல்லும் வீதியில் நீர் ஊடறுத்துச் செல்வதால் போக்குவரத்து பெரும் ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

    மட்டக்களப்பு நகருக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த வீதியையே மக்கள் பயன்படுத்துவதனால், தொழிலுக்கு, கல்வி கற்பதற்கும், ஏனைய தேவைகளுக்கும் செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.

    இவ்வீதியால் பயணம் செய்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்குள் நீர் பாய்ந்ததால் செயழிலந்த நிலையில் காணப்பட்டு, பின்னர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அதனை இயக்க வைத்து செல்கின்றனர்.

    இவ்வீதியானது பள்ளமாக காணப்படுகின்றது. இவ்வீதியை உயர்த்தி இரு பக்கமும் அணையை கட்டி சீர் செய்து தந்தால் தங்களுக்கு மழை காலத்தில் எவ்வித இடையூறும் இன்றி பயனம் செய்ய ஏதுவாக இருக்கும் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பயணிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

    இதனால் பஸ் நிறுத்துவதற்கு தனியார் பஸ் நடனத்துனர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் உள்ளனர்.

    எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பஸ் தரிப்பு நிலையத்திற்கு நீர் வராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தனியார் பஸ் நடத்துனர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பில் கனத்த மழை நீரினால் மூடப்பட்ட போக்குவரத்து வீதிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top