• Latest News

    November 22, 2014

    ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு கொண்டு வர மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதவை வழங்க ஏகமனதாக

    தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

    சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

    அவசர தேர்தல் ஒன்றை அறிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்கொலைக்கு ஒப்பான காரியத்தை செய்து கொண்டுள்ளார்.

    நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் அரசியல் அமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதே எமது பிரதான நோக்கம்.

    ஜனவரி 8 ஆம் திகதியில் இருந்து 100 நாட்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து விட்டு பிரதமர் தலைமையிலான ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்துவதே எமது திட்டம்.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக பேசவில்லை. எனினும் தமிழ் மக்களின் ஆதரவு இதற்கு கிடைக்கும் என நம்புகிறோம்.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டணியில் இணையா விட்டாலும் மக்களுக்கு வெறுத்து போன இந்த மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கலாம் என எமது செயற்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர்.

    அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களை தென் பகுதி மக்கள் மாத்திரமல்லது வடக்கு மக்களும் உணர்ந்திருப்பார்கள்.

    இதனால் தென் பகுதி மக்களின் ஆதரவு கிடைப்பது போன்று வடக்கு மக்களின் ஆதரவும் எமக்கு கிடைக்கும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு கொண்டு வர மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதவை வழங்க ஏகமனதாக Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top