மலையக மக்களுக்கு காணி, வீட்டுரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரி சிவில் அமைப்புகள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் இன்று ஹற்றன் நகரில் அமைதி பேரணி ஒன்றை மேற்கொண்டார்கள்.
இருநூறு வருட மலையக மக்களின் வரலாற்றினை கொஸ்லாந்தை அனர்த்தம் உலகுக்கு வெளிகாட்டிவிட்டது. இந்நிலை தொடருமானால் இன்னும் இருநூறு வருடங்களுக்கும் இவ் அவலநிலை தொடரத்தான் போகின்றது. இதற்கு நாம் இனியும் இடமளிக்க கூடாது. இதனை மாற்றவேண்டிய தருவாயில் நாங்கள் இப்போது இருக்கின்றோம் என்பதை மலையக மக்கள் உணர வேண்டும்.
கொஸ்லாந்தை அனர்த்தத்தின் விளைவுகள் மலையக மக்கள் மனதில் உணர்ந்தால் ஒவ்வொருவரும் சிந்தித்து இனி ஏற்படவிருக்கின்ற அனர்த்தத்தினையும் இல்லாதொழித்து பாதுகாப்பான இடங்களில் சொந்த வீடு, சொந்த காணி பெற்றுக் கொள்வதற்காக ஒன்றினைந்து போராட வேண்டும்.
எமது மலையக அரசியல்வாதிகள் முன்னின்று எமது மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அரசியல் தொழிற்சங்க பேதமின்றி முன்வரவேண்டும்.
அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்க தீர்மானித்துள்ளனர்.
எனினும் தோட்ட தொழிலாளிகளுக்கு மட்டுமில்லாமல் தோட்ட தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கும் ஏனைய தனியார் துறையில் மற்றும் அரச துறையில் பணி புரிவர்களுக்கு தோட்டத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இந்த வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும்.
லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக குறைந்த பட்சம் 20 பேர்ச் காணியுடனான தனி வீட்டு திட்டத்தை அமைக்க வேண்டும் என இந்த பேரணியில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
20 பேர்ச் காணி கொடுப்பதற்கான இடங்கள் மலையகத்தில் அதிகளவாக காணப்படுகின்றது. அந்த இடங்களை இனங்கண்டு வழங்குவதற்கு மலையக அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து முன்வரவேண்டும் என பேரணியில் ஈடுப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர.

0 comments:
Post a Comment