• Latest News

    November 09, 2014

    யாழில் 100 குடும்பங்களுக்கு பசுக்களை வழங்கிய ஓமல்பே சோபித தேரர்

    யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய, நாளாந்தம் போதிய வாழ்வாதாரத்தை பெற முடியாத 100 குடும்பங்களுக்கு 100 பசு மாடுகள் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஸ்ரீ போதிராஜா நிதியத்தின் தலைவருமான ஓமல்பே சோபித தேரர் வழங்கியுள்ளார்.

    இறைச்சிக்காக அறுக்கப்படவிருந்த நிலையில், மீட்கப்பட்ட 100 பசுமாடுகள் இவ்வாறு 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்வு நேற்று யாழ் பொது நூலகத்திற்கு எதிரில் நடைபெற்றது.

    இதில் யாழ்ப்பாணத்திற்கான இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவும் கலந்து கொண்டார்.

    யாழ்ப்பாணத்தில் வாழும் வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் யாழில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் வடக்கிற்கும் தெற்கிற்குமான உறவை முன்னேற்றுவது இதன் பிரதான நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழில் 100 குடும்பங்களுக்கு பசுக்களை வழங்கிய ஓமல்பே சோபித தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top