• Latest News

    March 25, 2015

    மாட்டு ஆட்சியை அரசாங்கம் நடத்தி வருகின்றது!– மஹிந்தானந்த அலுத்கமகே

    நல்லாட்சி எனக் கூறும் அரசாங்கம் தற்போது மாட்டு ஆட்சியை நடத்தி வருவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
    தற்போது அமைச்சுப் பதவிகளை வகித்து வருவோர் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்லாட்சி பற்றி ஜனாதிபதி செயலமர்வு ஒன்றை நடத்த வேண்டும்.
    அரசாங்கத்தின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம்.
    குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டாம் என நாம் கூறவில்லை.
    குற்றம் செய்திருந்தால் அவர்களை தண்டிக்க வேண்டியது அவசியமானது.
    எனினும் கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பலர் தற்போது ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
    ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு தங்களது பிழைகளை மூடி மறைத்துக்கொண்டுள்ளனர்.
    கையூட்டல், மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 80 வீதமானவை போலியான முறைப்பாடுகள் என அவர் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாட்டு ஆட்சியை அரசாங்கம் நடத்தி வருகின்றது!– மஹிந்தானந்த அலுத்கமகே Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top