எஸ்.றிபான் -
மு.காவின் தேசிய மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. பெருந் திரளான மக்கள் நாட்டின் நாலா பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்தார்கள். மு.காவின் தேசிய மாநாடுகளில் அதிக பணச் செலவும், அதிக அளவு மக்கள் தொகையும் 19வது தேசிய மாநாட்டில்தான் கலந்து கொண்டார்கள். தேசிய மாநாட்டிற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோர்கள் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து பிரமித்துப் போய் இருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பெரும் தொகை மக்களை திரட்டியதில் ரவூப் ஹக்கீம் பெரு வெற்றி கண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மு.காவின் தேசிய மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. பெருந் திரளான மக்கள் நாட்டின் நாலா பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்தார்கள். மு.காவின் தேசிய மாநாடுகளில் அதிக பணச் செலவும், அதிக அளவு மக்கள் தொகையும் 19வது தேசிய மாநாட்டில்தான் கலந்து கொண்டார்கள். தேசிய மாநாட்டிற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோர்கள் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து பிரமித்துப் போய் இருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பெரும் தொகை மக்களை திரட்டியதில் ரவூப் ஹக்கீம் பெரு வெற்றி கண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதே வேளை, தேசிய மாநாட்டிற்கான ஆயத்த வேலைகளைச் செய்வதில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், ரவூப் ஹக்கீம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கடுப்பாக இருப்பதாகவும் மு.காவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரவூப் ஹக்கீமுக்கு மகிழ்ச்சி
பாரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தேசிய மாநாட்டிற்கு வருகை தந்த மக்கள் தொகை ரவூப் ஹக்கீமுக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களினால் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்டிருக்;கும் நெருக்கடிகள், இவர்களில்லமால் இந்த மாநாட்டை இவரினால் நடத்த முடியுமா என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்தன. இவற்றிக்கிடையே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாவற்றிக்கும் தலைவரின் கைககளை எதிர்பார்த்துக் கொண்டமை என தேசிய மாநாடு தொடர்பில் ரவூப் ஹக்கீம் மிகப் பெரிய சவாலை எதிர் கொண்டார். இதனால், கூடிய சன வெள்ளம் ரவூப் ஹக்கீமுக்கு சந்தோசத்தை மாத்திரமன்றி, தைரியத்தையும் கொடுத்திருக்கும். இதனை அவரின் ஆவசப் பேச்சின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது.
ஆயினும், மாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலாளர்களுக்கும், கட்சியின் ஆதரவாளர்களுக்கும், ஏனைய கட்சிகளின் பிரதானிகளுக்கும் ஏமாற்றத்தையும் இம்மாநாடு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கட்சியின் தேசிய மாநாட்டிற்கு நாட்டின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, ஏனைய கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் என நீண்ட வரிசையில் அதிதிகள் இருந்தார்கள். இவர்களை அழைத்து வருவது தமது கட்சிக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவை பறைசாட்டுவதும், கட்சியின் எதிர்காலத் திட்டங்களை முன் வைப்பதும், முஸ்லிம்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளையும் எடுத்துக் கூறுவதும் அவசியமாகும். இவை பற்றி மு.காவின்; தேசிய மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமென்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கட்சிக்குள் தம்மோடு முரண்பட்டுக் கொண்டிருக்கும் தவிசாளர் பசீர்சேகு தாவூத், செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி ஆகியோர்களை காரசாரமாக, மறைமுகமாக ஆதரவாளர்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கும் வகையில் ரவூப் ஹக்கீம் கருத்துக்களை முன் வைத்தார்.
தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.
இன்று நாட்டில் புதிய அரசியல் யாப்பு பற்றி எல்லா கட்சிகளும் பேசுகின்றன. வெளிநாடுகளும் அது விடயத்தில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. படைத் தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. நுரைச்சோலை வீட்டுத் திட்டப் பிரச்சினை, வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்திகளில் காணப்படும் தடைகளும், பிரச்சினைகளும், யுத்தத்தினாலும், பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்குரிய நஸ்டஈட்டுப் பிரச்சினைகள், புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான உத்தரவாதங்கள் என பல பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற போதிலும், அவை குறித்து எந்தத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. மு.காவினால் இது வரைக்கும் நடைபெற்ற மாநாடுகளில் எல்லாம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், 19வது தேசிய மாநாட்டில் மாத்திரம்தான் எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், தேசிய மாநாடு எந்த நோக்கத்திற்காக கூட்டப்பட்டதென்ற கேள்வி எழுகின்றது. தமது தலைமைத்துவத்திற்கான அங்கிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்காகவே தேசிய மாநாட்டை நடத்தியதாக உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இவரது கருத்தின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ள முடியாதுள்ளது. ஏனெனில், ஒலுவில் கிறீன் வில்லாவில் நடைபெற்ற ஊடகவிகவியலாளர் சந்திப்பில் 19வது தேசிய மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும், நடப்பு வருடத்திற்கான கொள்கைப் பிரகடனம் செய்யப்படுமென்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். அது மாத்திரமின்றி, தேசிய மாநாட்டில் தமது தலைமை உரையில் கூட கட்சியின் கொள்கைப் பிரகடனம் இரண்டாவது அமர்வில் நடைபெறும் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
ஆனால், இரண்டாவது அமர்வில் கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார். அவர்களின் முகத் திரை கிழிக்கப்படுமென்று கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி அவர்களை கிண்டல் செய்யும் வகையில் தமது உரையை முடித்துக் கொண்டார்.
தமது தலைமை உரையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நீங்கள் எங்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றதென்று கூறினார். ஆனால், முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொண்டுள்ள கட்சி முஸ்லிம்களின் சுயநிர்ணயத்திற்கு எத்தகைய தீர்வை வேண்டி நிற்கின்றதென்று குறிப்பிட்டிருக்க வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைக்கும், முஸ்லிம்களின் எண்ணங்களுக்கும் பாரிய இடைவெளி காணப்படுகின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விட்டுக் கொடுக்க முடியாத இணைந்த வட, கிழக்கை வலியுறுத்துகின்றது. முஸ்லிம்கள் வடக்கும், கிழக்கும் இணையக் கூடாதென்று தெரிவிக்கின்றார்கள்.
இதனிடையே மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைய வேண்டுமாக இருந்தால் நிலத் தொடர்பற்ற தனி அதிகார அலகு தரப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டமையும் நினைவுபடுத்தப்படுகின்றது. இவற்றினைடையே தற்போது அரசியல் களம் மாற்றமடைந்துள்ளது. இந்த களத்தில் முஸ்லிம்களில் அதிகம் பேர் கிழக்கு மாகாணம் தனியாக நிர்வாகம் செய்யப்பட வேண்டுமென்று பல அமைப்புக்களின் மூலமாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் நாளாந்தம் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இந்தப் பின்னணியில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஆதரவுத் தளத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் மு.காவின் 19வது தேசிய மாநாட்டில் தமது நிலைப்பாட்டையும், அது குறித்தான தீர்மானங்களையும், கொள்கைப் பிரகடனத்தையும் வெளியிட்டிருக்க வேண்டும். இதனைச் செய்யாது விட்டமையால் தற்போது மு.காவின் தலைமைக்கு இருந்த உள்ளக முரண்பாடுகளுக்கு மத்தியில் ஏன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.
இதே வேளை, மு.காவின் தேசிய மாநாடுகளில் அதிக பணச் செலவும், அதிகமான சனத்திரளும் கொண்ட 19வது தேசிய மாநாட்டை ஏனைய தலைவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்லுதல் வேண்டும். குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகிய இருவரும் தங்களின் நிலைப்பாட்டை மிகவும் ஆணித்தரமாக எடுத்துக் கூறினார்கள். தங்களின் நிலைப்பாட்டை முஸ்லிம்கள் மத்தியில் எடுத்துக் கூறுவதற்கு இதனை விட சந்தர்ப்பம் கிடைக்காதென்று இவர்கள் கருதிக் கொண்டார்கள் எனலாம்.
இரா.சம்பந்தன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமது உரையில் '1957ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பண்டா – செல்வா உடன்படிக்கையிலும், டட்லி - செல்வா ஒப்பந்தத்திலும் வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. 1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்திலும் வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களைப் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது.' என்றார். ஆனால், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால்தான் மர்ஹும் அஸ்ரப் அந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்களின் முதுகில் எழுதிய அடிமைச் சாசனம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த ஒப்பந்தம் தமிழ் பேசும் மக்களுக்காக உருவாக்கப்படவில்லை. தமிழர்களின் நன்மைகளை மட்டுமே குறிப்பிட்டிருந்தது. எந்தக் கேள்வியுமின்றி இரவோடு இரவாக வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டது. இதன் பின்னர் முஸ்லிம்கள் பல துயரங்களை மேலதிகமாக அனுபவிக்கத் தொடங்கினார்கள். இந்த ஒப்பந்தம்தான் வட, கிழக்கும் நிரந்தரமாக இணைய வேண்டுமென்ற மனப் பதிவை தமிழர்கள் மத்தியில் ஆழப்பதியச் செய்தது. இணைந்த வட-கிழக்கிற்கு அதிகாரங்கள் போதென்று கூறி அதனை நிராகரித்த தமிழர் தரப்பு, அந்த குறைந்த அதிகாரங்களையும் அனுபவித்து ருசித்துள்ளது. அதனால்தான் கூடிய அதிகாரங்களைக் கொண்ட இணைந்த வட,கிழக்கை அவர்கள் கேட்கின்றார்கள். அவ்வாறு வடக்கும், கிழக்கும் இணைக்கப்படுமாக இருந்தால், அதற்கு அதிகாரங்களும் அதிகம் வழங்கப்படுமாக இருந்தால் முஸ்லிம்களின் நிலை எவ்வாறு இருக்குமென்று சிந்திக்க வேண்டும்.
ஆறு கடக்கும் வரைக்கும் அண்ணன்- தம்பி, ஆற்றைக் கடந்த பின் நீ யாரோ நான் யாரோ என்ற நிலை முஸ்லிமகளுக்கு ஏற்பட்டு விடக் கூடாது. தமிழர்கள் தமது இலக்கை அடைந்து கொள்வதற்கு முஸ்லிம்களை பயன்படுத்தி கொள்ள எண்ணுகின்றார்கள். ஆதலால், முஸ்லிம்களுக்கு புதிய அரசியல் தீர்வில் எத்தகைய அதிகாரம் இருக்குமென்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கு நாங்கள்தான் எங்களுக்குரியதைக் கேட்க வேண்டும். கேட்காமல் யாரும் தட்டில் வைத்துத் தரமாட்டார்கள்.
இதே வேளை, மு.காவின் தேசிய மாநாட்டில் அதிகார பங்கீடு சிங்களவர்களோ, முஸ்லிம்களோ கேட்கவில்லை. நாங்கள்தான் கேட்டோம் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். இதன் மூலமாக உங்களுக்கு கிடைப்பதனைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதிகாரத்திற்காக நீங்கள் பேரம் பேச முடியாது என்றதொரு செய்தியை மறைமுகமாக முஸ்லிம்களுக்கு அவர் சொல்லியுள்ளார்.
ஆனால், முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக் குழுக்களினால் தாக்கப்பட்டப்பட்ட போது, கொலை செய்யப்பட்ட போது, தங்களது பூர்வீகக் காணிகளை பறிகொடுத்த போதுதான் தமிழர்களுடன் இணைந்து அதிகாரம் செலுத்த முடியாதென்ற நிலைப்பாட்டிற்கு வந்தார்கள். முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களுடன் இணைந்து போராடினார்கள். ஆயினும், முஸ்லிம்களை பிரித்து வைத்தே ஆயுதக் குழுக்களும், தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளும் பார்த்தன. இன்று முஸ்லிம்களுக்கும் அதிகாரம் வழங்கப்படுமென்று தமிழர் தரப்பு கூறினாலும், அது எப்படியாதென்று சொல்லவில்லை. தங்களுக்கு இவ்வாறுதான் அதிகாரங்கள் இருக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொண்டிருக்கின்றது. ஆக, ஆறு கடப்பதற்குத்தான் முஸ்லிம்களை பயன்படுத்துவதற்கு தமிழர் தரப்பு எண்ணுகின்றது.
எனவே, முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள மு.கா தமது தேசிய மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தால் அந்த மாநாடு அர்த்தமுடையதாக மாறியிருக்கும். மு.காவின் உள்முரண்பாடுகள் எமக்கு பிரச்சினையில்லை. பல முரண்பாடுகளை கண்ட கட்சி. முரண்பாடுகளை வெற்றி கொள்ளும். முரண்பாடு கொண்டவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால், 19வது தேசிய மாநாட்டில் திரண்ட மக்களை மீண்டும் இதே ஆண்டில் திரட்ட முடியாது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமது சுமூகத்தின் எண்ணங்களை அரசாங்கத்திற்கும், ஏனைய கட்சிகளுக்கும், சர்வதேசத்திற்கும் சொல்லிருக்க வேண்டும்.
ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட மாகாணத்திற்கோ, தமிழர்கள் அதிகம் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கோ சென்றால் தமிழர்களின் காணி விடுவிப்பு, அதிகாரப் பகிர்வு என தமிழர்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளைப் பற்றியும் எடுத்துக் கூறுகின்றார். ஆனால், முஸ்லிம்களை பெரும் தொகையாக கலந்து கொண்ட மாநாட்டில், அதுவும் முஸ்லிம்களின் அதிக பட்ச ஆதரவைப் பெற்றுள்ள கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு தமது அரசியல் எதிரியாகிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு பதில் அளித்துள்ளார். ஆதலால், அவரும் மு.காவின் தேசிய மாநாட்டில் முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதென்று தெரிவிக்கவில்லை. இது போலவே பிரதம ரணில் விக்கிரமசிங்கவும் பேசிவிட்டு சென்றுள்ளார்கள். இவர்களின் பேச்சுக்களின் மூலமாக இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்காது போய் விடுமோ என்ற எண்ணத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் மு.காவின் 19வது தேசிய மாநாடு முஸ்லிம்களினால் நிறைந்துள்ளது. வருகை தந்த தலைவர்களும் பிரமித்துப் போனார்கள். பரிசுகளை எதிர்பார்த்து வருகை தந்த முஸ்லிம்களோ வெறும் கையுடன் திரும்பிச் சென்றார்கள். தீர்மானங்களாவது நிறைவேற்றப்பட்டிருந்தால் அதனை வந்த தலைவர்களுக்கு செய்தியாகவும், முஸ்லிம்களின் எதிர் பார்க்கையாகவும் காட்டியிருக்க முடியும். முஸ்லிம்களுக்கு நாளை கிடைக்கும் பரிசு என்றும் கருதி இருக்கலாம். ஆனால், இவைகள் நடக்கவில்லை. இதனால், முஸ்லிம்கள் இலங்கை அரசியலில் இலக்கு இல்லாது பயணிக்கின்றார்கள் என்று எண்ணுவதற்கும் இடமுண்டு. இந்த எண்ணம் நீடிக்க விடக் கூடாது. மு.கா தமது உள் முரண்பாடுகளை தீர்க்க வேண்டும்.
முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒரு கூட்டமைப்பாக செயற்படுவதற்கு முன் வருதல் வேண்டும். மு.காவின் 19வது தேசிய மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு, கிழக்கு கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டாக இயங்குவது போன்று, பெரும்பான்மையான மலையக கட்சிகளும் ஒரு கூட்டமைப்பாக இயங்குகின்றது. இது போன்று முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் கூட்டமைப்பாக செயற்பட முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இந்த நல்ல செய்தியை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிந்தனைக்கு எடுக்க வேண்டும்.
நன்றி:விடிவெள்ளி

0 comments:
Post a Comment