• Latest News

    March 26, 2016

    படைவீரர்களையும், பௌத்த பிக்குகளையும் அரசாங்கத்திற்கு எதிராக தூண்ட முயற்சி?

    கோப்புப் படம்
    படைவீரர்களையும் பௌத்த பிக்குகளையும் அரசாங்கத்திற்கு எதிராக தூண்டி விடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச புலனலாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்கத் திட்டங்களை சீர்குலைக்கும் நோக்கில் இவ்வாறு தூண்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\

    இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் தூண்டுதல்களை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கீழான கூட்டு எதிர்க்கட்சியின் குழுவொன்று இந்த சூழ்ச்சித் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

    கூட்டு எதிர்க்கட்சியின் ஒரு பகுதியான புத்திஜீவிகளின் குரல் என்ற அமைப்பே இந்த சூழ்ச்சித் திட்டத்தின் சூத்திரதாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.

    ஊனமுற்ற படைவீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைப் பயன்படுத்தி இந்த சூழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: படைவீரர்களையும், பௌத்த பிக்குகளையும் அரசாங்கத்திற்கு எதிராக தூண்ட முயற்சி? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top