• Latest News

    April 01, 2016

    சந்தேக நபர் முன்னாள் புலி உறுப்பினர்; விசாரணைகள் தீவிரம்

    யாழ்ப்­பாணம், சாவ­கச்­சேரி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மறவன் புலவு - வள்ளக் குளம் பகுதி வீடொன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்ட தற்­கொலை அங்கி, கிளைமோர் குண்­டுகள் மற்றும் வெடி பொருட்­களின் இறுதி இலக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வாக இருக்­கலாம் என பாது­காப்பு தரப்பு சந்­தே­கிக்­கி­றது.

    இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணைகள்,  உளவுப் பிரிவின் தக­வல்கள் உள்­ளிட்­ட­வற்றின் அடிப்­ப­டை­யி­லேயே பாது­காப்பு தரப்­பினர் இந்த சந்­தே­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

    எவ்­வா­றா­யினும் இது தொடர்பில் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளவும், அவ்­வாறு ஜனா­தி­பதி இலக்கு வைக்­கப்­பட்­டி­ருப்பின் அதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் தொடர்பில் வெளிப்­ப­டுத்திக் கொள்­ளவும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு விஷேட விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளது.

     பிர­புக்கள் பாது­காப்பு மற்றும் விஷேட நிலை­மைகள் தொடர்­பி­லான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் பதில் பொலிஸ் மா அதி­ப­ரு­மான  எஸ்.எம்.விக்­ர­ம­சிங்­கவின் உத்­த­ர­வுக்கு அமைய இந்த விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

    பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் நேரடி கட்­டுப்­பாட்டில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர்  டப்­ளியூ. கே.என்.டி. சில்­வாவின் கீழ் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

     அதன் படி இந்த விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட 30 வய­து­டைய எட்வர்ட் ஜூலியஸ் எனும் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­டாத முன்னாள் புலிகள் இயக்க உறுப்­பி­னரை சாவ­கச்­சேரி பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து பொறுப்­பேற்­றுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்கள் அவரை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

     நேற்று மாலை வரை செய்­யப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக குறித்த தற்­கொலை அங்கி, கிளைமோர் குண்­டுகள் உள்­ளிட்ட ஆயு­தங்கள், வெடி பொருட்கள் குறித்த வீட்­டி­லி­ருந்து பிறி­தொரு இடத்­துக்கு கொண்டு செல்­லவே தயார் நிலையில் பொதி செய்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

    இந் நிலை­யி­லேயே 2008 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 29 ஆம் திக­திக்­கு­ரிய  சிங்­கள பத்­தி­ரிகை ஒன்­றினால் அவை மறைத்து பொதி செய்து தயார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ளமை விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

     சிங்­களப் பத்­தி­ரிகை பொதி செய்ய பயன்­ப­டுத்­தப்­பட்­ட­மையில் ஏதேனும் சாதக நிலமை ஒன்று இருக்­கலாம் என சந்­தே­கிக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அது தொடர்­பிலும் விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

    இத­னி­டையே கிளி­நொச்சி அக்­க­ராயன் குளம் பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்டு கிளி­நொச்சி பொலிஸ் நிலை­யத்தில் சந்­தேக நபர் வழங்­கி­யுள்ள வாக்­கு­மூ­லத்தில், யுத்­தத்தின் பின்னர் கைவி­டப்­பட்ட நிலையில் முல்­லைத்­தீவு பகு­தியில் இருக்கும் வாக­னங்­களில் இருந்தே குறித்த வெடி பொருட்­க­ளையும் தற்­கொலை அங்­கி­க­ளையும் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும், வெடி பொருட்கள் தனது தொழி­லான மீன்­பிடித் தொழிலை முன்­னெ­டுக்க உதவும் என்­ப­தா­லேயே எடுத்து வந்­த­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

    எனினும் விசா­ர­ணை­யா­ளர்கள் அவ­ரது அந்த வாக்­கு­மூ­லத்தை நிரா­க­ரிக்­கின்­றனர். கைவி­டப்­பட்ட வாக­னங்­களில் அத்­த­கைய வெடி பொருட்கள், தற்­கொலை அங்கி மறைத்து வைக்­கப்­பட வாய்ப்­புக்கள் குறைவு என சுட்­டிக்­காட்டும் விசா­ர­ணை­யா­ளர்கள், சந்­தேக நபர் தொழி­லுக்­காக கொண்டு வந்­தி­ருப்பின் கிளைமோர் குண்­டுகள், தற்­கொலை அங்­கிகள், 100 தோட்­டாக்கள் என்­பன எதற்­காக கொண்­டு­வ­ரப்­பட்­டன என்­பது குறித்து ஆரா­யப்­படல் வேண்டும் என தெரி­விக்­கின்­றனர்.

    இந்­நி­லை­யி­லேயே அவ­ரது  அந்த வாக்­கு­மூ­லத்தை பயங்­க­ர­வாத புல­னாய்­வா­ளர்கள் நிரா­க­ரிக்­கின்­றனர்.

    இத­னி­டையே கைதா­கி­யுள்ள சந்­தேக நபர் தொடர்பில் வேறாக செய்­யப்­பட்ட விசா­ர­ணை­க­ளிலும் பல்­வேறு தக­வல்கள் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. அதன்­படி சந்­தேக நபர் தனது 13 ஆவது வய­தி­லேயே விடு­தலைப் புலி­க­ளுடன் இணைந்­தவர் என தெரி­விக்கும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி, இறு­திக்­கட்ட யுத்தம் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தியில் வன்­னியில் இருந்து புலி­களின் பிடி­யையும் மீறி சந்­தேக நபர் வவு­னியா வந்து கூலி வேலை­களை செய்து சிவில் சமூ­கத்­து­ட­னான தனது வாழ்வை ஆரம்­பித்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் உறு­தி­யா­ன­தாக குறிப்­பிட்டார்.

    குறித்த சந்­தேக நபர்   ஒரு மீன் வர்த்­தகர் என்றும் அவ­ரிடம், சிறிய ரக லொறி­யொன்று இருப்­ப­தா­கவும், அதி­லேயே அவர், மீன் வர்த்­தக  நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­தா­கவும் அறி­ய­மு­டி­கின்­றது. இவ்­வா­றான நிலையில், கஞ்சா உள்­ளிட்ட போதைப் பொருட்­க­ளையும் அவர், கடத்தி விற்­பனை செய்­த­தா­கவும் இர­க­சியப் பொலி­ஸா­ருக்குத் தகவல் கிடைத்­துள்­ளது.

    இந் நிலை­யி­லேயே அவ­ரது மனைவி பொலி­ஸா­ருக்கு அழைப்பை ஏற்­ப­டுத்தி தனது கணவர் வீட்டில் கஞ்சா பொதி­களை வைத்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். கண­வ­ருடன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாட்டை அடுத்தே அவர் பொலி­ஸா­ருக்கு இதனைத் தெரி­வித்­துள்ளார்.

    இத­னை­ய­டுத்தே யாழ் பிராந்­திய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் கித் சிறி ஜயலத் தனது நேரடி கட்­டுப்­பாட்டில் உள்ள பிராந்­திய துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களை சுற்­றி­வ­ளைப்­புக்கு அனுப்­பி­யுள்ளார்.

    இந்­நி­லையில், செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் வேளையில், குறித்த நபர் வீட்­டுக்கு வரு­வ­தாக, பொலி­ஸா­ருக்குத் தகவல் கிடைத்­துள்­ளது. இத­னை­ய­டுத்து உஷா­ர­டைந்த பொலிஸார், அவரை மடக்கிப் பிடிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டனர். சந்­தே­க­நபர், இரவு 9 மணி­யா­கியும் வீட்­டுக்கு வர­வில்லை.

    இத­னை­ய­டுத்தே, அப்­ப­கு­தியை விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருடன் இணைந்து,  பொலிஸார் சுற்­றி­வ­ளைத்­துள்­ளனர். அதன் பின்னர், குறிப்­பிட்ட வீட்­டுக்குள் அதி­ர­டியாய் நுழைந்­துள்­ளனர்.

    அப்­போது வீட்டில், சந்­தே­க­ந­பரின் மனைவி மற்றும் அவர்­க­ளு­டைய பிள்ளை மற்றும் சந்­தே­க­ந­பரின் தந்தை ஆகியோர் மட்­டுமே இருந்­துள்­ளனர்.

    வீட்டில், கஞ்சா போதைப்­பொ­ருளைத் தேடி, தேடுதல் வேட்டை  நடத்­திய பொலிஸார், படுக்­கை­ய­றையின் தட்­டி­லி­ருந்தே இந்த வெடி­பொ­ருட்­களை மீட்­டுள்­ளனர்.

    இத­னை­ய­டுத்து அவ­ரு­டைய மனைவி,  அவ்­வி­டத்­தி­லேயே மயங்கி விழுந்­து­விட்டார். இத­னை­ய­டுத்து சந்­தே­க­நபர் தொடர்­பி­லான விவரம் அடங்­கிய தகவல், சகல பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டது. மயங்கி விழுந்த அப்பெண், பொலிஸ் பாது­காப்­புடன் சாவ­கச்­சேரி ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

    பொலிஸார், அவர்­க­ளு­டைய பிள்­ளை­யையும் கூடவே வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்­றுள்­ளனர் என்றும் அறி­ய­மு­டி­கின்­றது.

    மயக்கம் தெளிந்­ததும், பொலி­ஸாரும் புல­னாய்வுப் பிரி­வி­னரும் அப்­பெண்­ணிடம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். அவர், கிளி­நொச்சி அக்­க­ராயன் பகு­திக்கு அடிக்­கடி சென்று வரு­வ­தாக தெரி­வித்­த­தை­ய­டுத்து, அப்­ப­கு­தியில் திடீர் சுற்­றி­வ­ளைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போதே, அக்­க­ராயன் குளம் பகு­தியில் தனது டிமோ பட்டா ரக லொறியில் தென் பகு­தியை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த போது  சந்­தே­க­நபர், நேற்று முன்­தினம்  பிற்­பகல் 2 மணி­ய­ளவில் கைது செய்­யப்­பட்டார்.

    சந்­தே­க­நபர், மன்னார் முருங்கன் பகு­தியைச் சேர்ந்­தவர் என்றும், அவ­ருக்கு இரண்டு மனை­விகள் என்றும், முதல் மனைவி இறந்­து­விட்­ட­தா­கவும், அவர்­க­ளுக்குப் பிறந்த பிள்­ளையே தற்­போது உள்ள பிள்­ளை­யென்றும்  விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இந்­நி­லை­யி­லேயே, சாவ­கச்­சேரி மறவன் புலவில் இரண்­டா­வது தட­வை­யாக திரு­மணம் செய்­துள்ளார்.

    அவ­ருக்கும், அவ­ரது இரண்­டா­வது மனை­விக்கும் இடையில் அடிக்­கடி சண்டை ஏற்­ப­டு­வ­தாவும், அச்­சண்­டை­களின் போதெல்லாம், மனைவி கோபித்­து­கொண்டு, வீட்­டை­விட்டு வெளி­யே­றி­வி­டு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

    இவ்­வா­றான நிலையில் சந்­தே­க­நபர், தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் உறுப்­பினர் என்றும் அவர், புனர்­வாழ்வு பெற்­றி­ருக்­க­வில்லை என்றும் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது. கைது செய்­யப்­பட்­டவர் ரமேஷ் என்­ற­ழைக்­கப்­படும் எட்வட் ஜூலியஸ் (வயது 30) என்றும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

     இந் நிலையில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்­துக்கு அழைத்து வரப்­பட்­டுள்ள சந்­தேக நப­ரிடம் தீவிர விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. சந்­தேக நபரின் தொலை­பேசி இலக்கம் பூரண வலை­ய­மைப்பு பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவ­ரது தொலை­பே­சிக்கு உள் வந்த, வெளிச் சென்ற அழைப்­புக்கள், அவ­ரது வெளி­நாட்டு தொடர்­புகள் குறித்து ஆரா­யவே இது குறித்த ஆய்­வு­களை ஆரம்­பித்­த­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர்  தெரி­வித்தார்.

     இந் நிலையில் அவ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக, ஆயுத கட்­டளைச் சட்­டத்தின் கீழ் விளக்­க­ம­றி­யலில் உள்ள சந்­தேக நபர் ஒருவர் தொடர்பில் தற்­ச­மயம் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரின் கவனம் திரும்­பி­யுள்­ள­தா­கவும், குறித்த நப­ரு­ட­னான சந்­தேக நபரின் தொடர்­பு­களை உறு­திப்­ப­டுத்தும் சான்­று­களை தற்­ச­மயம் புல­னாய்­வா­ளர்கள் சேக­ரித்து வரு­வ­தா­கவும் அறி­ய­மு­டி­கி­றது.

     இத­னி­டையே ' ஜனா­தி­ப­தியைக் கொல்ல இரா­ணுவ முகாம் ஒன்றில் சதித்­திட்டம் தீட்­டப்­பட்­ட­தாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்தி சில நபர்­களின் பெயர் விப­ரங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த ஐக்­கிய தேசிய கட்­சியின் யாழ். மாவட்ட அமைப்­பளர் துவா­ர­கேஷ்­வ­ர­னிடம் வாக்­கு­மூலம் பெறு­வது குறித்தும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். அவ­ரது குறித்த கருத்­துக்கள் தொடர்பில் ஏற்­க­னவே வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர், தேசிய உளவுப் பிரி­வினர் உள்­ளிட்டோர் வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்­தி­ருந்த நிலை­யி­லேயே, சில விட­யங்­களை மேலும் உறு­திப்­ப­டுத்த மீண்­டு­மொ­ரு­முறை அவரை அழைத்து விசா­ரணை செய்து வாக்­கு­மூலம் ஒன்­றினை பதிவு செய்­வது குறித்து புல­னாய்­வா­ளர்கள் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

    அத்­துடன் குறித்த ஆயு­தங்கள், தற்­கொலை அங்கி ஆகி­யன வெள்­ள­வத்தை பகு­திக்கு கொண்­டு­வர தயார் நிலையில் இருந்­த­தாக  முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று முன்­தினம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்த கருத்து தொடர்­பிலும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் விளக்கம் கோரு­வது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

    எவ்வாறாயினும் நேற்று மாலை வரை பயங்கரவாத புலனாய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு விசாரணைகளில், மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்டவை எங்கு கொண்டு செல்லப்பட, யாரை இலக்கு வைத்து மறைத்து வைக்கப்பட்டது என்பதற்கான உறுதியான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

    சம்பவம் குறித்த விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    நேற்று முன்தினம் அதிகாலை, சாவகச்சேரி  வீட்டிலிருந்து தற்கொலை அங்கியொன்றும், நான்கு கிளைமோர் ரகத்தைச் சேர்ந்த குண்டுகள், இரு கிளைமோர் ரக குண்டுகளை வெடிக்க வைக்கும் பெட்டரிகள், 12 கிலோ கிராம் நிறைக் கொண்ட அதி சக்தி வாய்ந்த ரி.என்.ரி. வெடிபொருட்கள், 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் 100 (இரு பெக்கட்டுக்கள்) ஆகியன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

    இவை நேற்று நீதிவான் முன்னிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் தற்சமயம் அவை புலனாய்வாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

    குறித்த ஆயுதங்கள், வெடி்பொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியன நல்ல நிலையிலேயே உள்ளதாக வட பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சந்தேக நபர் முன்னாள் புலி உறுப்பினர்; விசாரணைகள் தீவிரம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top