• Latest News

    April 02, 2016

    முஸ்லிம்களை அச்சுறுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா...

     சத்தார் எம் ஜாவித் -
    முஸ்­லிம்­க­ளுக்கு எதிராகத்  தொடரும் அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் அரசு கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.
    இலங்­கை வாழ் முஸ்­லிம்கள் அமை­தி­யா­கவே வாழ விரும்­பு­கின்­றனர்.
     
    அவர்கள் எந்­த­வித பிரி­வி­னைக்கோ அல்­லது வன்­மு­றைக்கோ செல்­வ­தை அல்­லது அவற்றில் ஈடு­ப­டு­வ­தற்கு விரும்­பு­வ­தில்லை. மாறாக அவர்கள் தாமும் தமது மார்க்­கமும் என்ற கொள்­கையில் இருக்­கின்­றனர்.

    ஆனால் இன்று இலங்­கையில் அமை­தி­யாக வாழும் முஸ்லிம் சமு­கத்­தினை வன்­மு­றை­யா­ளர்­க­ளாக சித்திரித்து இந்த நாட்டில் மீண்­டு­மொரு இரத்தக் களரியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஓர் அங்­க­மா­கவே பொது­பல சேனா தொடர்ந்தும் முஸ்­லிம்கள் விட­யத்தில் அவர்­களின் சமய சமூக விட­யங்­களில் முட்டிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

    இவர்கள் இலங்­கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இருப்­ப­தா­கவும் அதனைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றும் அர­சாங்­கத்­தி­னையும், மக்­க­ளையும் பொய்­யான தக­வல்­களைக் கொடுத்துக் கொண்டு இந்த நாட்டின் அமை­திக்கும், சமா­தா­னத்­திற்கும் குந்­த­க­மாக அச்­சு­றுத்திக் கொண்டு இருந்து வரு­கின்­றமை விச­னத்­திற்­கு­ரிய விட­ய­மா­கவும், கவலை தரும் விட­ய­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது.

    அர­சாங்­கமும்,  பாது­காப்புத் தரப்­பி­னரும் பல தட­வைகள் ஐ.எஸ்.ஐ.எஸ். இலங்­கையில் இல்லை அதுபற்றிய அச்­சமும் தேவை­யில்லை என்று அறி­வந்­தி­ருக்­கின்ற வேளையில் இவர்கள் அதனை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்­டி­ருப்­பது இந்த நாட்டில் அவர்கள் முஸ்­லிம்­களை வெறுக்க நினைக்கும் விட­ய­மா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.

    இவர்கள் விட­யத்தில் குறிப்­பாக முஸ்­லிம்கள் மீது அபாண்டம் கூறு­வதை அரசு உடன் நிறுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த அரசு இன­வா­தத்­திற்கும், சமய நிந்­த­னை­க­ளுக்கும் இட­மில்லை என்று கூறும் போது  பொது­பல சேனாவின் தீய செயற்­பா­டுகள் விட­யத்தில் சட்ட ரீதி­யான கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்காவிட்டால் அது எதிர் காலத்தில் பாரிய பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­பதில் ஐய­மில்லை என்­ப­துடன் அது வன்­மு­றைக்கும் வித்­திடும் என்ற கவ­லையை முஸ்லிம் தலை­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

    பௌத்தர் என்று கூறிக் கொண்டும், தேரர்கள் என்றும் கூறிக் கொண்டும் இவர்கள் ஏனைய சமூ­கங்கள் மீது நடந்து கொள்ளும் மிக­மோ­ச­மான கொள்­கை­யு­டை­ய­வர்­க­ளாக இருப்­பது முழு பௌத்த சமு­கத்­தி­னையும் வெட்கித் தலை குனிய வைத்­துள்­ளது.

    பொது­பல சேனா ஏனைய சமூ­கங்­களை விமர்சின்­கின்றோம் என கூறிக் கொண்டு தமது பௌத்த தர்­மத்­தி­னையே கொச்­சைப்­ப­டுத்தி ஏனைய சமூ­கங்கள் மத்­தியில் தமது சம­யத்தின் கௌர­வத்­தி­னையும், நன்­ம­திப்­பையும் இல்­லாமல் செய்­வ­த­னையே காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

    பௌத்த தர்­மத்­தினை பொது­பல சேனாவின் தீய செயற்­பா­டு­களில் இருந்து பாது­காத்துக் கொள்ள வேண்­டிய கட்­டாய தேவை அனைத்து பௌத்த மாகா சங்­கங்­க­ளுக்கும் உள்­ளது.

    இதனை அவர்கள் செய்யா விட்டால் பௌத்த தர்­மத்தின் சகல நம்­பிக்­கை­களும் ஏனைய சமூ­கங்­களில் இருந்து அகற்­றப்­ப­டு­வ­தற்­கான நிலை­மை­களே பொது­பல சேனா­வினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றதை ஏனைய சமு­கங்கள் காண்டு கொண்­டி­ருக்­கின்­றன.

    நாட்டில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டும் அபா­யத்­திற்கும் இட்டுச் சென்று கொண்­டி­ருக்­கின்ற வறுமை நிலை­மைகள், பாலியல் பலாத்­கா­ரங்கள், கொலைகள், போதைப் பொருள் பாவ­னைகள், அதன் விற்­ப­னைகள், மது­பானப் பாவ­னைகள், கொள்­ளைகள்  போன்ற விட­யங்­களை கட்­டுப்­ப­டுத்தி மக்­களை அந்த அழி­வு­களில் இருந்து காப்­பாற்ற வேண்­டிய பாரிய பொறுப்­புக்­களும், தேவை­களும் இருக்­கின்ற தற்­கால சூழ்­நி­லையில் அவற்றைச் செய்­யாது முஸ்லிம் சமு­கத்­தினை அழிக்கும் முனைப்பில் செயற்­ப­டு­வது அவர்கள் தமது சம­யத்­திற்கு செய்யும் பாரிய துரோ­க­மா­கவே காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

    பொறுப்­புள்ள அர­சாங்கம் என்ற வகையில் இந்த நாட்டில் தீய சக்­தி­களால் சிறு­பான்மைச் சமு­கங்­கள் தாக்­கப்­படும் செயற்­பா­டு­களை உடன் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றும் அதன் செயற்­பா­டு­களில் ஈடு­படும் சக­ல­ரையும் பாகு­பா­டற்ற வகையில் கைது செய்து தண்­டனை வழங்­கி நாட்டில் அச்­சத்தைப் போக்கி ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என வும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    எனவே தற்­போ­தைய நிலையில் இந்த தேசிய நல்­லிணக்க அரசின் சகல நல்ல செயற்­பா­டு­க­ளையும் மழுங்­க­டிக்கச் செய்யும் இவர்­களுக்கு எதிராக சட்ட ரீதி­யான முறையில் அவ­சர நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களை அச்சுறுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா... Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top