• Latest News

    July 27, 2016

    மருமகனின் உதட்டை கடித்த மாமி

    தனிமையில் இருந்த மாமியாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்த போது, மருமகன் தனது கீழ் உதட்டின் ஒரு பகுதியை இழந்த சம்பவமொன்று கிரிந்திவெல பொலிஸார் பிாவில் இடம்பெற்றுள்ளது.

    குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 44 வயதுடைய மருமகனை கிரிந்திவெல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

    சந்தேகநபரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதால், இவர்களது மகள்; பாதுகாப்பிற்காக மாமியாரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    கைதுசெய்யப்பட்ட நபர், மகள் பிரத்தியேக வகுப்புக்காக சென்றிருந்த போது, தனிமையில் இருந்த மாமியாரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

    இருப்பினும், அவரிடமிருந்து தன்னை பாதுகாப்பதற்காக அவரின் கீழ் உதட்டின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    அத்துடன், தனது கடைசி மகளின் வீட்டுக்கு பாதுகாப்புக்காகச் சென்ற குறித்த மாமியார் கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

    இதன் பிரகாரம், கிரிந்திவெல பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
    27.07.2016
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருமகனின் உதட்டை கடித்த மாமி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top