• Latest News

    July 27, 2016

    மஹிந்தவின் பாத யாத்திரைக்கு சோதனை

    நாளை நடத்தப்படவிருந்த மஹிந்த ராஜபக்சவின் பாதயாத்திரையை கண்டி நகருக்கு வெளியில் இருந்து ஆரம்பிக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

    அதேவேளை, ஐக்கியத் தேசியக் கட்சியின் மேம்பாட்டு செயற்திட்டத்தை நாளை பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் நடத்துமாறும் கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    குறித்த இரண்டு உத்தரவுகளும் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே மாவனெல்ல நகருக்குள் மஹிந்த அணியின் பாதயாத்திரைக்கு பிரவேசிக்க மாவனெல்ல நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஹிந்தவின் பாத யாத்திரைக்கு சோதனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top