இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-
எமது போராட்டத்தினால் இரண்டு பொருளாதார மத்திய நிலையங்கள் வடக்கிற்கு கிடைத்துள்ளன. இந்த பொருளாதார நிலையங்களை அமைப்பதற்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவினை தலா 100 மில்லியன் ரூபா வீதம் இரண்டிற்கும் வழங்கி கட்டுமானப்பணிகளை ஆரம்பிக்கவேண்டும். அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தில் மிகுதி பணத்தினை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களிலும் ஒரே பொருட்களை சந்தைப்படுத்தாது மாங்குளத்தில் மாமிச உணவுவகைகளையும், வவுனியாவில் மரக்கறிவகைகளையும் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுப்பது சிறந்ததாகும் என்று பலரும் ஆலோசனை கூறிவருகின்றனர்.
இது குறித்தும் நாம் எதிர்காலத்தில் பரிசீலிக்கவேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment