• Latest News

    July 06, 2016

    நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சரின் இணைபுச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

    (எம்.எம்.ஜபீர்)
    புனித றமழான் மாதம் முழுவதும் பசித்திருந்து, தாகித்திருந்து முழுத்தியாகத்துடன் நோன்பு நோற்று பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்  என நகரத்திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சரின் இணைபுச் செயலாளரும் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் பிரதிச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

    மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுவதாவது.. நோன்பின் மூலம் ஏழைகளின் பசியையும், வறுமையையும் உணர்ந்து கொண்டது மாத்திரமில்லாமல் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக இன்று பெருநாளைக் கொண்டாடுகிறோம்.

    இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும், ஏனைய சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் உன்னத பணியை செய்ய முஸ்லிம் சமூகத்தினர் அனைவரும் முன்வர வேண்டும் .ஆகவே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நன்நாளில் அனைத்து சமூகத்தையும் கண்ணியப்படுத்தி ஒற்றுமையுடனும், சந்தோசமாகவும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழிகாட்ட வேண்டும் .எனப் பிராத்திப்பதோடு இப்புனித பெருநாளைக் கொண்டாடும் அனைத்து நேஞ்சங்களுக்கும் எனது இனிய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சரின் இணைபுச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top