(எம்.எம்.ஜபீர்)
இந்தநன்நாளில்
சமாதனம், புரிந்துனர்வு, அன்பு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை ஆகிய
மனித விழுமியங்களின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த அழகிய
வழிமுறையில் இப்பெருநாளை கொண்டடுவோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஐ.எல்.எம்.மாஹிர் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச்
செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும்
தெரிவிக்கையில், இன்றைய பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் அனைவரும்
அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து, நறுமணம் பூசி,
இன்சுவை உணவுகள் உண்டு பின்னர் பள்ளிவாசல்களிலே ஒன்று கூடி தக்பீர்
முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்வர்.
பள்ளிவாசல்களிலே தமது சகோதார்கள், உறவினர்களுடன் தோளோடு தோள் சேர்த்து
நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி
தமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வர்கள்.
இந்த
புனிதமான நோன்புப் பெருநாளை கொண்டடும் இலங்கை வாழ் மக்கள், வெளிநாடுகளில்
தொழில் புரியும் எமது சகோதரர்களுக்கும் மற்றும் உலகில் வாழ் முஸ்லிம்கள்
அனைவருக்கு இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மன
மகிழ்ச்சியடைகின்றேன்.
பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்
இந்த மகிழ்ச்சிகரமான நாளில் நோன்பு கற்றுத் தந்த இனிய போதனைகளை என்றும் நம்
மனதில் நிறுத்தி நம் வாழ் நாள் முழுவதும் அதன்படி நடக்க இறைவனிடம்
இந்நன்நாளில் பிராத்திப்போம் என மேலும் தனது வாழ்த்துச் செய்தியில்
தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment