அமெரிக்கத் தேர்தலுக்கான நேரம் எண்ணப்பட்டு வருவதாக ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.
பிலடெல்பியாவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக் கொண்டதையடுத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இந்த நியமனத்தின் மூலம் அமெரிக்காவின் பிரதான கட்சியொன்றால் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் இந்த நியமனத்துக்காக கட்சிக்குள் பாரிய சவாலை எதிர்கொண்டிருந்தார்.
"அதிகார சக்திகள் எம்மை பிரிப்பதற்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன.” என ஹிலாரி தெரிவித்தார்.
குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வேற்றுமையை விதைப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். “அவர் எம்மை எஞ்சிய உலகத்திலிருந்தும் ஒருவருக்கொருவரிடமிருந்தும் பிரிக்க விரும்புகிறார்" என ஹிலாரி கூறினார்.
இந்நிலையில் மேற்படி உரை குறித்து டொனால்ட் டிரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் விடுத்த செய்தியில், அடிப்படைவாத இஸ்லாம் குறித்து குறிப்பிட ஹிலாரி கிளின்டன் தவறியுள்ளமை, இந்த நாட்டைத் தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு பொருத்தமற்றவராக அவரை மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஹிலாரி கிளின்டன் மேடையில் தோன்றுவதற்கு முன்னர் அவரது மகள் செல்ஸி கிளின்டன் தனது தாயா ரின் தனிப்பட்ட ஞாபகங்களை கூடியிருந்த பெருந் தொகையான ஆதரவாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அற்புதமான அன்பாதரவுடைய மகிழ்ச்சிகரமான தனது தாயார் எப்போதும் தனக்கு ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார்.
தனது மகளின் உரையைத் தொடர்ந்து மேடையில் தோன்றி உரையாற்றிய ஹிலாரி கிளின்டன், "நம்பிக்கை மற்றும் கௌரவத்துக்கிடையிலான பிணைப்புகள் பிளவடைந்து வருகின்றன. அங்கு உத்தரவாதங்கள் எதுவும் இல்லை. தற்போது நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதா என தீர்மானிக்க வேண்டியுள்ளது. அதன் மூலமே நாங்கள் ஒன்றாக எழுச்சிபெற முடியும்" எனத் தெரிவித் தார்.
“நாங்கள் பயப்படவில்லை. நாம் சவால்களுக்கு எதிராக எழுச்சிபெறுவோம்" என சூளுரைத்த அவர், அமெரிக்காவின் சுபீட்சமானது சமத்துவமின்மை, வரையறுக்கப்பட்ட சமூக ஒருங்கிணைப்பு, அரசியல் முட்டுக்கட்டை, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்துமான அச்சுறுத்தல்கள் உள்ளடங்கலான விடயங்களால் அபாயத்தில் உள்ளதாக கூறினார்.
எனினும் சுதந்திரம் மற்றும் சமத்துவம், நீதி மற்றும் வாய்ப்பு ஆகிய அமெரிக்காவின் தார்மீக பண்புகளின் உதவியுடன் அந்த சவால்களை வெற்றி கொள்ளக் கூடியதாகவிருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அதிக ஊதியத்துடனான தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், நிதி சீர்திருத்தங்களை முன்னெடுத்தல், வாக்களிக்கும் உரிமைகளை பாதுகாத்தல், தூய சக்திக் கொள்கையினூடாக காலநிலை மாற்றம் தொடர்பில் பிரசார நடவடிக்கையை முன்னெடுத்தல், அமெரிக்காவிலுள்ள ஆவணப்படுத்தப்படாத குடியேற்றவாசிகள் பிரஜாவுரிமையை பெறுவதற்கு வழிவகை செய்தல், ஆகக் குறைந்த தேசிய வருமானத்தை அதிகரித்தல், துப்பாக்கி பாவனை கட்டுப்பாடு, நீதியற்ற வர்த்தக உடன்படிக்கைகளை நிராகரித்தல், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளித்தல் போன்றவற்றை முன்னெடுக்க ஹிலாரி கிளின்டன் உறுதியளித்தார்.
அதேசமயம் தனது போட்டி வேட்பாளரான டொனால்ட் டிரம்பால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
“நாங்கள் (குடியேற்றவாசிகளைத் தடுக்க) சுவரை கட்டமைக்கப் போவதில்லை. நாம் அனைவரும் நல்ல ஊதியத்துடன் சிறந்த தொழிலைப் பெற வழிவகை செய்யும் வகையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பப் போகிறோம். தான் தனியான அனைத்தையும் சீர்செய்யப் போவதாக கூறும் எவரையும் நம்ப வேண்டாம். அவர் (டொனால்ட் டிரம்ப்) 70 நிமிடங்கள் உரையாற்றினார். ஆனால் அவர் பூச்சிய தீர்வுகளையே முன்வைத்தார்.” என ஹிலாரி குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment